இஸ்ரேல் பிரதமருக்கு கொலை மிரட்டல்: எச்சரிக்கும் உளவுச்சேவை
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை (Netanyahu) கொலை செய்யப்போவதாக ஈரானிய (Iran) உளவுச்சேவை எச்சரித்துள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, காசாவில் இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக, ஏமனின் ஹவூதி போராளிகளும், லெபனானின் ஹிஸ்புல்லாஹ் போராளிகளும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், தற்போது இஸ்ரேல் குறித்த போராளி அமைப்புக்களுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
ஈசல்கள் போல பாய்ந்து வந்த ஈரானின் ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகள்! திருப்பி அடிக்கத் தயராகும் இஸ்ரேல்!!
பதில் தாக்குதல்
இதற்குள் அந்த போராளி அமைப்புக்களுக்கு ஆதரவாக செயற்படும், ஈரான், நேற்று இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதனையடுத்து, ஈரானுக்கு எதிராக பதில் தாக்குதல்களை நடத்தப்போவதாக இஸ்ரேலின் அமைச்சரவை அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த விடயத்தில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.
இதற்கு மத்தியிலேயே இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவை பயங்கரவாதி என்று அறிவித்துள்ள ஈரானிய உளவுச்சேவை, அவரை கொலை செய்யப்போவதாக எச்சரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam