ஈரான் ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
இரண்டு நாள் பயணமாக ஈரான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசியை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று (15.1.2024) திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம், ஈரானில் உள்ள சாம்பஹார் துறைமுகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
அத்துடன் ஈரானுடனான ஒப்பந்தங்களில் ஏற்படும் தாமதங்களுக்கு தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி இப்ராகிம் ரைசி வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இப்ராகிம் ரைசியை சந்தித்த பின் ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹசன் அமீர் அப்துல்லாஹின்னையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.