இலங்கையில் தாக்குதல் திட்டமா! மறுக்கும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்
இலங்கையின் அறுகம் குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் படுகொலை செய்யும் திட்டம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் என்பவற்றின் பின்னணியில், தமது நாடு இருப்பதாக கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் ஈரானைச் சேர்ந்த ஃபர்ஹாத், தற்போது ஈரானில் மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, 2024 ஒக்டோபரில் பாரிய துப்பாக்கிச் சூடு நிகழ்வைத் திட்டமிடுமாறு, ஈரானால் சகேரிக்கு அறிவுறுத்தப்பட்டதாக பெடரல் பீரோ ஒஃப் இன்வெஸ்டிகேசனை மேற்கோள்காட்டி அமெரிக்க நீதித்துறை குற்றம் சுமத்தியிருந்தது.
இலங்கையில் தாக்குதல்
எனினும், அமெரிக்க மக்கள் தங்கள் முடிவை எடுத்துள்ளதாகவும், அவர்கள் விரும்பும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் உரிமையை தமது நாடு மதிப்பதாகவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் செயிட் அப்பாஸ் அராகி கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் தாக்குதல் திட்டம் தொடர்பான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam