ஈரான் போர் எதிரொலி: விமான சேவைகள் இரத்து - உயரும் பயணக் கட்டணம்
ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக ஏர் நியூசிலாந்து (Air New Zealand) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது விமான சேவைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
ஏர் நியூசிலாந்து நிறுவனம் மே மாதம் தொடக்கம் வரை சுமார் 1,100 விமான சேவைகளை (5 வீதம்) இரத்து செய்துள்ளது.
இதனால் சுமார் 44,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் விலை உயர்வால் ஏர் நியூசிலாந்து, குவாண்டாஸ் (Qantas) மற்றும் தாய் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு
ஈராக், அருகே எரிபொருள் கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு பீப்பாய் எண்ணெய் 200 டொலரை எட்டும் என ஈரான் எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கு வான்பரப்பில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால், பல விமானங்கள் ஐரோப்பாவிற்குச் செல்ல அமெரிக்க வான்பரப்பை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்துகின்றன.
உலகின் பரபரப்பான துபாய் விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன்கள் விழுந்ததால் வான் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேத்தே பசிபிக் (Cathay Pacific) போன்ற நிறுவனங்கள் துபாய்க்கான விமானங்களை ரத்து செய்துவிட்டு, லண்டன் மற்றும் சூரிச் நகரங்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்கி வருகின்றன.
இந்தப் போர் சூழலால் வியட்நாம் போன்ற நாடுகளில் அடுத்த மாதமே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி: ஓய்வூதியக் கணக்குகளில் அவசரத் தேவைக்காகப் பணம் எடுப்பவர்கள் அதிகரிப்பு
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam