ஈரானின் இம்பாக்ட் ஏவுகணைத் தாக்குதல்களால் திணறும் அமெரிக்கா! பற்றி எரியும் குவைத்
கடந்த வாரங்களில் ஈராக் பகுதியிலே தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்கப்போர் விமானங்களின் பின்னணியில் அந்த அரசினுடைய ஆதரவு இருந்ததா என்கின்ற சந்தேகம் இப்போது அமெரிக்காவிடம் எழுந்துள்ளது.
இந்தநிலையிலே, 80ஆவது கட்ட ஏவுகணைத்தாக்குதல் மூலம் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டு இருக்கின்றோம்.அதற்கான பெயராக இம்பாக்ட் என்கின்ற பெயரை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் கூறியிருக்கின்றார்.
அத்தோடு, இந்த இம்பாக்ட் தாக்குதலின் மூலம் இஸ்ரேலின் முக்கிய அணுசக்தி மையமாகப் பார்க்கக்கூடிய டிமோனா அணுசக்தி மையம் டெல் அவ்யு மற்றும் குவைத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் அமெரிக்க இராணுவ இலக்குகள் குறி வைத்து தாக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, அமெரிக்காவினுடைய வெள்ளை மாளிகை திணறிக் கொண்டு இருக்கின்றது.நாங்கள் பேசுவதற்கு அழைக்கின்றோம். ஈரான் தாக்குதல்கள் மூலம் உங்களோடு பேசுகின்றோம் என்று கூறியது இப்போது இராஜதந்திர ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகுப்பார்வை நிகழ்ச்சி,