திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சலே! காப்பாற்ற துடிக்கும் ராஜபக்ஷ பக்தர்கள்!
குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுரேஷ் சலே தற்போது உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதில் ஏற்பட்ட ஒரு நோய் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரான சுரேஷ் சலேவிற்கான வழக்கு நாளையதினம்(26) கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, சுரேஷ் சலேவை காப்பாற்றுவதற்காக அதாவது அவரை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருக்கின்றனர் என ராஜபக்கவின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மேலும், கோட்டாபய ராஜபச்கவின் ஆதரவாளர்கள் சுரேஷ் சலேவிற்கு ஆதரவாக இலங்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் கையெழுத்து வேட்டை ஆரம்பித்து இருக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி...