ஈரான் நெருக்கடிக்கு மத்தியில் மோடியை அவசரமாக அழைத்த அநுர - உண்மையில் நடந்தது என்ன..!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் நெருக்கமாக இணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்தியப் பிரதமர் மோடியும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த உரையாடலின் போது, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் இடையூறுகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மத்திய கிழக்கில் உருவாகி வரும் சூழ்நிலை குறித்து விவாதித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை தொடர்ந்து சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கையும் அதில் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், ஈரானிய போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்தமை பாரிய சிக்கல்களை அநுர அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியது.
இதற்கிடையில், இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்டுள்ள இந்த உரையாடல் பேசுபொருளாகியுள்ளது.
இவ்விடயம் உள்ளிட்ட பல தகவல்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,