ஈரான் மீது இஸ்ரேலின் கடும் தாக்குதல்: இராணுவ வீரர்கள் பலி
ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 4 ஈரானிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் தெஹ்ரான், குசெஸ்தான் மற்றும் இலம் ஆகிய நகரங்களின் மீது இஸ்ரேல் நேற்றையதினம் (26.10.2024) வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, தம் நாட்டை பாதுகாத்துக்கொள்ள ஈரானுக்கு முழு உரிமை இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு பதிலடி
முன்னதாக, இந்த மாதம் 01ஆம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேலின் இராணுவ தளங்கள் மீது இந்த மாதம் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri