இலங்கைக்கருகே தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பல்! 104 பேர் பலி : ஈரானில் இருந்து வெளிவந்த தகவல்
கடந்த வாரம் இலங்கை கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குறைந்தது 104 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் ஈராணுவம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த தாக்குதலின் போது 32 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.
104 பேர் மரணம்
இலங்கையின் தெற்கு துறைமுக நகரமான காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் டெனா என்ற போர்க்கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது.

இதில், உயிரிழந்தவர்களுள் 80 இற்கும் மேற்பட்ட சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதுடன், 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்தநிலையில், கப்பலில் பயணித்தவர்களுள் மொத்தமாக 104 பேர் உயிரிழந்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அருகே ஈரான் கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க படைகளால் இரட்டை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல்