இலங்கை அருகே ஈரான் கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க படைகளால் இரட்டை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க டர்பிடோவால் ஈரானிய கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க படைகள் இருமுறை கப்பல் குழுவுக்கு கப்பலை விட்டு செல்ல உத்தரவிட்டதாக Iran International, a Persian-language satellite TV channel and news network தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது மார்ச் 4 அன்று இலங்கை கரையை கடந்து இந்திய பெருங்கடலில் அமெரிக்கா ஒரு நீர்மூழ்கி கப்பல் தாக்கிய ஈரானிய போர் கப்பல் IRIS டேனாயின் கடற்படை உறுப்பினர், கப்பல் டார்பீட்டால் தாக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது தந்தையை தொலைபேசியில் அழைத்து இதனை குறிப்பிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இரட்டை எச்சரிக்கைகள்
இரட்டை எச்சரிக்கைகள் வந்த போதும், IRIS டேனா கமாண்டர் கப்பல் குழுவினரை கப்பலை விட்டு செல்ல அனுமதிக்க மறுத்தார் என்று, கடற்படை உறுப்பினரின் குடும்பத்துடன் நெருங்கியுள்ள ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி அறிக்கை கூறியுள்ளது.

கடற்படை உறுப்பினரின் தந்தை சில குழுவினர் கமாண்டருடன் வாதமிட்டதாகவும், எச்சரிக்கையின் போது சில குழுவினர் உயிர்காக்கும் படகுகளில் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
பின்னர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் Seyed Abbas Araghchi X தளத்தில், கப்பலில் 130 கடற்படை உறுப்பினர்கள் இருந்தனர் என்று பதிவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பு
இலங்கை கடற்படையினர் ஈரானிய கப்பலருகே அந்த இடம் வந்தபோது, கப்பல் மூழ்கி, 32 உறுப்பினர்கள் கடலில் லைஃப்போட்களில் மிதந்த நிலையில் இருந்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் அந்த 32 உறுப்பினர்களை மீட்டெடுத்து கரைக்கு கொண்டுசென்றனர்.
பின்னர், 208 உறுப்பினர்களை கொண்ட மற்றொரு ஈரானிய கடற்படை கப்பல் IRIS புஷேர் இலங்கை அருகே வந்தடைந்த நிலையில் அதனை இலங்கை அரசாங்கம் பொறுப்பெற்றுள்ளது.