ஈரான் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஈரானின் புஷெஹ்ர் (Bushehr) அணுமின் நிலையத்திற்கு அருகில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கிருக்கும் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் பெரும் கவலை வெளியிட்டுள்ளார்.
"இந்தத் தாக்குதலானது ஒரு பாரிய எச்சரிக்கையாகும். இவ்வாறான தாக்குதல்கள் ஒரு அணுசக்தி விபத்தைத் தூண்டக்கூடும்.
தீவிரமடையும் வான்வழி தாக்குதலினால் நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள் - அபுதாபியில் பற்றியெரியும் ஆலை
தீவிரமடையும் மோதல்
அதன் சுகாதார பாதிப்புகள் வரும் பல தலைமுறையினரை அழித்துவிடும். மோதல் தீவிரமடையும் ஒவ்வொரு நாளும், அச்சுறுத்தல்களும் ஆபத்துகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன" என்று டெட்ரோஸ் தனது 'X' தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அணுமின் நிலையத்திற்கு மிக அருகில் எறிகணை ஒன்று விழுந்ததாகவும், அதன் சிதறல்கள் தாக்கியதில் அங்கிருந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) அறிக்கையைத் தொடர்ந்து டெட்ரோஸ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது ஈரானில் தற்போது செயல்பாட்டில் உள்ள ஒரே ஒரு அணுமின் நிலையம் ஆகும். இது சுமார் 250,000 மக்கள் வாழும் புஷெஹ்ர் நகரில் அமைந்துள்ளது.
ஈரானின் மிக முக்கியமான கைத்தொழில் மற்றும் இராணுவ மையங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam