அமெரிக்காவுடனான ஈரானின் பேச்சுவார்த்தை தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தாது என, அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"அவர்கள் (அமெரிக்கா) உத்தரவுகளை வழங்குவதும் அச்சுறுத்துவதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்" என்று பெஷேஷ்கியன் கூறியதாக, ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதிய அணுசக்தி ஒப்பந்தம்
முன்னதாக, புதிய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு கடிதம் அனுப்பியதாக டிரம்ப் கூறியிருந்தார்.
இதற்கு, பதிலளித்திருந்த ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தெஹ்ரான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் தடுக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை, டிரம்ப் அளித்த பேட்டியில், "ஈரானை கையாள இரண்டு வழிகள் உள்ளன என்றும் இராணுவ ரீதியாக, அல்லது ஒப்பந்தம் மூலமாக அதனை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட் டிருந்தார்.
அணு ஆயுத உருவாக்கம்
அணு ஆயுதத்தை உருவாக்க விரும்புவதை ஈரான் நீண்ட காலமாக மறுத்து வருகிறது. இருப்பினும், ஈரான் யுரேனியத்தின் செறிவூட்டலை 60% தூய்மையாக வியத்தகு முறையில் துரிதப்படுத்துகிறது, இது சராசரியாக 90% ஆயுத தர நிலைக்கு அருகில் உள்ளது என்று சர்வதேச அணுசக்தி மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை News Lankasri

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri
