ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அமெரிக்காவின் எச்சரிக்கைக்குள் மறைந்துள்ள மர்மம்
ஈரான் தனது புதிய உச்சத் தலைவரை அறிவித்ததன் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை நேரடியாகவே சவாலுக்கு இழுத்துள்ளது.
ஈரானின் உச்சத்தலைவரை தானே தெரிவு செய்வேன் என ட்ரம்ப் கூறி வந்த நிலையில் நேற்றையதினம்(8) ஈரான் புதிய தலைவரை அறிவித்துள்ளது.
மொஜ்தபா கமேனி ஈரானின் உச்சத்தலைவராக தெரிவு செய்யப்பட்டமையானது அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஒருவித அழுத்தத்தை கொடுக்கின்றதான ஒரு செயல் என்றே கூறப்படுகின்றது.
ஈரானியப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து நீண்ட காலம் செயலாற்றியவர் மொஜ்தபா கமேனி.இப்படிப்பட்ட இராணுவப்பின்புலம் கொண்ட ஒருவர் ஈரானில் யுத்தம் சூழ்ந்து இருக்கின்ற நிலையில் உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது ஈரானின் எதிரிகளுக்கு உவப்பான செய்தி கிடையாது.
ஈரானின் புதிய தலைவராக மொஜ்தபா காமெனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பதவி வகித்தவுடன் இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இவர் யார், இவரின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பற்றியும் இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நிராஜ் டேவிட் தொகுத்து வழங்கியுள்ளார்.