ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்! நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரானிய படைகள் நடத்திய தாக்குதலில், சனிக்கிழமை 3 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 8 ட்ரோன்களை (UAVs) அந்நாட்டின் வான் பாதுகாப்புப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றம்
ஈரானின் இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, இதுவரை மொத்தம் 341 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,748 ட்ரோன்களை அந்நாட்டு இராணுவம் எதிர்கொண்டுள்ளதாக 'X' தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் தாக்குதல்களின் விளைவாக, தங்களது தேசியக் கடமையை ஆற்றிக்கொண்டிருந்த இராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள்
மேலும், பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஸ் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 6 பொதுமக்கள் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.
இதுமட்டுமன்றி, மொத்தம் 160 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri