ஈரானின் சட்டபூர்வமான தலைவர்கள் படுகொலை! ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வை புறக்கணிக்க அழைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வைப் புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈரானின் சட்டபூர்வமான தலைவர்கள் படுகொலை
"ஈரானின் சட்டபூர்வமான தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக இலங்கை அரசு இதுவரை எந்தவொரு கண்டனத்தையும் வெளியிடவில்லை.

அமெரிக்கா மற்றும் மொஷாட் அமைப்பு இணைந்து முன்னெடுத்த இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறானதொரு இராஜதந்திர சூழலில், ஜனாதிபதியால் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வில் கலந்துகொள்வது பொருத்தமற்றது.
எனவே, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இந்த நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri