அமெரிக்கா ஈரானின் "சிவப்புக் கோடுகளை" தாண்டினால்.... பேரழிவிற்கு தயாராகுமாறு எச்சரிக்கை
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இதுவரை ஈரான் "மிகுந்த நிதானத்தை" கடைப்பிடித்து வந்துள்ளதாகவும், இலக்குகளை மிக கவனமாகத் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஈரானின் "சிவப்புக் கோடுகளை" கடக்கும் பட்சத்தில், ஈரானின் பதிலடி மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் தாண்டி உலகளாவிய ரீதியில் அமையும். இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்ட நிதானம் இனி தொடராது எனவும், அனைத்துக் காரணிகளையும் கருத்திற் கொள்ளாமல் கடுமையான பதிலடி வழங்கப்படும் எனவும் IRGC எச்சரித்துள்ளது.
ஈரான் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படலாம் என ஈரான் எச்சரித்துள்ளது.

பிராந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை "பல ஆண்டுகளுக்கு" சீர்குலைக்க முடியும் என ஈரான் கூறியுள்ளது.
இது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தீவிரமான நிலைப்பாடு காரணமாக, பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிப்பதோடு, உலகப் பொருளாதாரத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ள ஈரான்! போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு