வரலாற்றில் முதன்முறை: நிலவின் மறுபக்கத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நாசா
நிலவின் மறுபக்கத்தில் இருந்து மனிதகுலம் கண்ட முதல் காட்சி இதுவாகும். ஒரியன் (Orion) விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் ஏப்ரல் 06 ஆம் திகதியிடப்பட்டுள்ளது.
"மனிதகுலம், மறுபக்கத்தில் இருந்துx நிலவின் மறுபக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட முதல் புகைப்படம். நிலவின் அடிவானத்திற்கு அப்பால் பூமி மறையும் போது ஒரியன் விண்கலத்திலிருந்து படம் பிடிக்கப்பட்டது" என எக்ஸ் (X) தளத்தில் இதற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
நிலவின் மறுபக்கம்
ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் திங்கட்கிழமை மாலை பூமியிலிருந்து சாதனை அளவாக 252,756 மைல்கள் (406,771 கி.மீ) தூரம் பயணம் செய்துள்ளனர்.
இது மனிதர்கள் விண்வெளியில் இதுவரை பயணம் செய்திராத அதிகூடிய தூரமாகும்.
EARTHSET.
— The White House (@WhiteHouse) April 7, 2026
April 6, 2026.
Humanity, from the other side. First photo from the far side of the Moon. Captured from Orion as Earth dips beyond the lunar horizon. Photo: NASA pic.twitter.com/ZEBTQA85TY
இந்தத் தூரத்தில் விண்கலம் நிலவுக்கு மிக அருகில் சென்றபோது, கையை நீட்டிப் பிடித்திருக்கும் ஒரு கூடைப்பந்து (Basketball) அளவில் நிலவு காட்சியளித்ததாக நாசா (NASA) தெரிவித்துள்ளது.
நிலவைச் சுற்றி வரும்போது (Lunar Flyby), அதன் மறுபக்கத்தை வெறும் கண்ணால் (Unaided eye) நேரடியாகப் பார்த்த முதல் மனிதர்கள் என்ற பெருமையையும் இந்த விண்வெளி வீரர்கள் பெற்றுள்ளனர்.
தற்போது இந்த விண்வெளி வீரர்கள் நிலவில் இருந்து மீண்டும் பூமியை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த வரலாற்றுச் சாதனை விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ள ஈரான்! போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு