அமெரிக்க விமான மீட்பு நடவடிக்கை! 4 முக்கிய இராணுவ அதிகாரிகளை இழந்துள்ள ஈரான்
இஸ்பஹானுக்கு தெற்கே ஞாயிற்றுக்கிழமை நடந்த அமெரிக்க விமான மீட்பு நடவடிக்கையின்போது நான்கு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானிய இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்பஹான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அமெரிக்காநடத்திய தாக்குதலில் நான்கு அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
நான்கு ஈரானிய இராணுவ அதிகாரிகள்
அதிகாரிகள் “எதிரிப் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆதரவு விமானங்களுடன்” “நேரடி மோதலில்” ஈடுபட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
தோளில் வைத்துச் சுடும் ஏவுகணை ஒன்று அமெரிக்க விமானம் ஒன்றைத் தாக்கியதாகவும், அதன் பிறகு அந்தப் படைப்பிரிவு மற்ற விமானங்களால் குறிவைக்கப்பட்டதில் நான்கு அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட அதிகாரிகளையும் அவர்களது இராணுவப் பதவிகளையும் ஈரான் இராணுவம் அடையாளம் கண்டுள்ளது.
ஒரு பிரிகேடியர் ஜெனரல், ஒரு கர்னல், ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு ஃபர்ஸ்ட் லெப்டினன்ட் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
லீடர் திரைப்படத்தின் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
விருது மேல் விருது வாங்கிய பல்லவன், வீட்டில் நடேசன் செய்த காரியம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam