அனைத்து நாடுகளையும் ஆக்கிரமிக்கப் போகிறாரா ட்ரம்ப்..! அநுர தரப்பின் முன்னால் உள்ள கேள்விகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தியுள்ள தாக்குதல் குறித்து அரசின் தெளிவான நிலைப்பாடு என்ன, அமெரிக்க ஜனாதிபதியைக் கண்டு இந்த அரசு அஞ்சுகின்றதா என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(04.03.2026) புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்தக் காரசாரமான கேள்விகளை முன்வைத்தார்.
இலங்கை அரசின் நிலைப்பாடு
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ரம்ழான் நோன்பு என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆன்மீகக் கடமையாகும். எமது சக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூட நோன்பு நோற்ற நிலையில் தான் இங்கு சமூகமளித்துள்ளார்.
இவ்வாறானதொரு புனிதமான காலப்பகுதியிலேயே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். ஈரான் மக்கள் நோன்பு நோற்றிருந்த தருணத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கத் தலைவரே இதனை முன்னின்று செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு சண்டியரைப் போலவே செயற்படுகின்றார். அனைத்து நாடுகளையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையிலேயே அவர் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும், இப்போது அவர்கள் அமைதி காக்கின்றார்கள். அமெரிக்க ஜனாதிபதியைக் கண்டு இந்த அரசாங்கம் அச்சப்படுகின்றதா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam