இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இரு தலைவர்கள்! கொல்லும் திட்டத்தைக் கைவிட்ட இஸ்ரேல்
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் (Mohammad Baqer Qalibaf) ஆகியோரைத் தங்களது இலக்குப் பட்டியலில் (Hit List) இருந்து இஸ்ரேல் நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அமெரிக்கா வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.
பாகிஸ்தானின் கோரிக்கை
இவ்விரு தலைவர்களின் இருப்பிடங்கள் குறித்த துல்லியமான தகவல்கள் இஸ்ரேலிடம் இருந்தபோதிலும், அவர்களைக் கொன்றால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரானில் வேறு எவரும் இருக்கமாட்டார்கள் என்றும், அது போர்ச் சூழலை மேலும் சிக்கலாக்கும் என்றும் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வாதிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் தற்காலிகமாக இந்தத் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் மோதலைத் தணிக்க பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.
ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு
நேரடித் தொடர்பு
குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுப்பிய 15 அம்ச அமைதித் திட்டத்தைப் பாகிஸ்தான் வழியாகவே ஈரான் பெற்றுள்ளது.

இந்தப் போர்ச் சூழலில் பல நாடுகள் ஈரானுடனான தொடர்பைத் துண்டித்துள்ள நிலையில், பாகிஸ்தான் மட்டுமே இரு நாடுகளுடனும் நேரடித் தொடர்பில் உள்ளது.
எனவே, எதிர்காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றால், அதற்குப் பாகிஸ்தான் ஒரு முக்கிய தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக் கடற்பரப்பில் ஈரான் நடத்திய தாக்குதல்கள்: இலங்கை உட்பட நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் பலி
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri