ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அரசு தனக்கு அந்த நாட்டின் 'உயர்ந்தபட்ச தலைவர்' (Supreme Leader) பதவியை வழங்க முன்வந்ததாகவும், ஆனால் தான் அதனை "வேண்டாம், மிக்க நன்றி" என மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
பெரும் பரபரப்பு
ஈரானுடனான தற்போதைய பதற்றமான சூழலில் இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளின் பொருளாதார முடக்கம் குறித்து விவாதிக்கும் வேளையில், ட்ரம்ப் இவ்வாறு ஒரு வியக்கத்தக்க கருத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில், ஈரானின் 15 அம்ச அமைதித் திட்டத்தைப் பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் வழியாக அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
ஈரான் தரப்பு
ஈரானின் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலை 140% வரை உயர்ந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த கருத்து இராஜதந்திர வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அதேசமயம், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை ஒரு "கேலிக்கூத்து" என வர்ணித்துள்ளதுடன், இவ்வாறான எந்தவொரு திட்டமும் முன்வைக்கப்படவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உண்மையான அக்கறை காட்ட வேண்டும் என்றும், வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடக் கூடாது என்றும் ஈரான் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan