ஈரானுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு - ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் ஆற்றல் கட்டமைப்புகளின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை ஏப்ரல் 6 வரை 10 நாட்களுக்கு நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை ஈரான் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு
ட்ரம்பின் முடிவு
பேச்சுவார்த்தைகள் “மிகவும் நன்றாக நடைபெற்று வருகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அது உண்மையா என்பதை ஈரான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
திங்கட்கிழமை, ஈரானின் அணு வசதிகள் மீது தாக்குதல் நடத்தும் தனது மிரட்டலை வெள்ளிக்கிழமை வரை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
தற்போது அந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
போலியான செய்திகள்
போலியான செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் மற்றும் பிறர் கூறும் தவறான கருத்துக்களுக்கு மாறாக, அவை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன,” என்று அவர் Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்காவிட்டால், திங்கட்கிழமை மாலைக்குள் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.
பின்னர் 23ஆம் திகதியன்று 5 நாட்கள் தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதனை ஒத்திவைத்துள்ளார்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri