ஆசியக் கடற்பரப்பில் ஈரான் நடத்திய தாக்குதல்கள்: இலங்கை உட்பட நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் பலி
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலில், வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலுமிகள் பலி
கடந்த சில வாரங்களாக வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளின் துறைமுகங்களை நோக்கிச் சென்ற கப்பல்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் பலவும் இந்தப் பாதையைப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இந்த உயிரிழப்புகள் தெற்காசிய நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, வெளிநாடுகளில் பணியாற்றும் மாலுமிகள் அனுப்பும் பணத்தை (Remittances) நம்பியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன.
ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு
பெரும் நெருக்கடி
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் இந்த அசாதாரண சூழல் காரணமாக, பல்லாயிரக்கணக்கான தெற்காசியத் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இது அந்தந்த நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளதுடன், அப்பாவித் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.