அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்!
கீரி சம்பா உள்ளிட்ட சில அரிசி வகைகளை கறுப்புச் சந்தை விலையில் கூட வாங்க முடியாத நிலை காணப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
அத்தோடு, நிலைமையைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26.3.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரிசி இறக்குமதி
சம்பா, கீரி சம்பா உள்ளிட்ட சில அரிசி வகைகள் கட்டுப்பாட்டு விலையையும் தாண்டி விற்பனை செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, இது நாம் பாரதூரமாக எதிர்கொள்ள வேண்டிய ஒரு பிரச்சினையாகும்.

சில இடங்களில் கறுப்புச் சந்தை விலையில் கூட கீரி சம்பா மற்றும் சில அரிசி வகைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது அறுவடைக்காலம் ஆகும். இது குறித்து உணவுப் பாதுகாப்பு குழுவும் கலந்துரையாடியுள்ளது. நிலைமை இப்படியே தொடர்ந்தால், கறுப்புச் சந்தை விலையைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam