இலங்கைக்கு எரிபொருள் வழங்க ரஷ்யா இணக்கம்..
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இந்த இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்பன விரைவில் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் தீவிரமடையும் நிலைமை! தேவையின்றி வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை
ரஷ்யா இணக்கம்
35,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றி வந்த ஒரு கப்பல் நேற்று (24) நாட்டிற்கு வந்தடைந்ததாகவும், அதனை இறக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் நெட்டிகுமாரகே உறுதிப்படுத்தினார்.

மேலும், இந்த மாதத்திற்குள் கூடுதலாக இரண்டு எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஒரு கப்பல் 30,000 மெட்ரிக் தொன் ஆக்டேன் 92 பெட்ரோலையும், 5,000 மெட்ரிக் டன் ஆக்டேன் 95 பெட்ரோலையும் ஏற்றி வர உள்ளதாகவும், இரண்டாவது கப்பல் 8,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளுடன் 32,000 மெட்ரிக் தொன் டீசலையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.