மத்தியக் கிழக்கு மோதல் நிலை! தேசிய அவசர நிலையை அறிவித்த முதலாவது நாடு
மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர் தொடர்ந்து நீடித்து வருவதால், பிலிப்பைன்ஸில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதன் காரணமாக இவ்வாறு தேசிய அவசர நிலை பிரகடனப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய போர்ச்சூழலால் அவசரநிலையைப் பிரகடனப்படுத்திய முதலாவது நாடாகவும் பிலிப்பைன்ஸ் பதிவாகியுள்ளது.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
மேலும், போர் நிலைமையினால் எரிசக்தி கட்டுப்பாடுகளுடன் போராடி வரும் தென்கொரியா, நாடு தழுவிய எரிசக்தி சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

அதேநேரத்தில், தாய்லாந்திலும் குளிரூட்டிகளின் வெப்பநிலையைக் குறைத்து அலுவலகங்களில் உடை உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கையிலும் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறைக்கும் நோக்குடன், தேசிய எரிபொருள் அனுமதி அட்டை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வாரந்தோறும் புதன் கிழமைகளில் அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.