சுரேஷ் சாலே தொடர்பில் சற்று முன்னர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலேவை எதிர்வரும் 22ஆம் திகதியன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(26) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிமன்றின் உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்தி குமார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

விசாரணை தொடர்பாக சந்தேக நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தாலும், இந்த சட்டவிரோதச் செயலில் அவர் ஒரு சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று நீதவான் தெரிவித்தார்.