மத்திய கிழக்கில் உள்ள 15 இலட்சம் இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து
இஸ்ரேல் - ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமை தீவிரம் அடைந்துள்ளமையால் சர்வதேச ரீதியாக பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்நிலையில் மத்திய கிழக்கில் பணிபுரியும் சுமார் 15 லட்சம் இலங்கையர்களின் வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
போர் பதற்ற நிலைமை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர்களுக்கு ஆபத்து
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, நாட்டின் பாதுகாப்பு துறையின் அனைத்து விடுமுறை நாட்களையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் பாரிய போர் நிலை ஏற்படும். இது பல நாடுகளுக்கு ஆபத்தாக மாறும்.
மேலும் எண்ணைய் களஞ்சியங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இலங்கை மற்றும் உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
