அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த காலகட்டத்தில் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் நிர்வாக ரீதியில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தலைவர்கள்
சில சபைகளுக்கு ஏற்கனவே புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் ஏனைய பணிப்பாளர் சபைகளுக்கு பொருத்தமான தலைவர்கள் அந்தந்த அமைச்சர்களால் நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
புதிய தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளை நியமிப்பது புதிய அமைச்சர்களின் கடமை என பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
