ஈரான் ஒரு தீய பேரரசு - மத்திய கிழக்கின் எதிர்காலம் குறித்து இஸ்ரேல் ஜனாதிபதி பரபரப்பு பேட்டி
மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் பிபிசி வானொலிக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் போரின் முடிவுதான் மத்திய கிழக்கின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
தீய பேரரசு
அத்துடன் "நாம் இப்போது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையில் இருக்கிறோம். இந்த ராணுவ நடவடிக்கையின் வெற்றியைப் பொறுத்தே மத்திய கிழக்கின் எதிர்காலம் அமைந்துள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

ஈரானிய குடியரசை "தீய பேரரசு" (Empire of Evil) என்று வர்ணித்த ஹெர்சாக், இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதே ஈரானின் நோக்கம் என்று குற்றம் சாட்டினார்.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களின் சட்டப்பூர்வத்தன்மை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் இஸ்ரேலைத் தாக்க ஈரான் முயன்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஈரானின் அச்சுறுத்தல்கள்
ஈரானின் அச்சுறுத்தல்கள் குறித்த ஏராளமான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அவற்றை பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பகிர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிராந்தியத்தில் ஒரு உண்மையான மாற்றத்தை உறுதி செய்யவே இஸ்ரேல் விரும்புவதாக அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு நடவடிக்கைகள் ஈரானுக்கு எதிராகத் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை அவரின் இந்தப் பேச்சு உறுதிப்படுத்துகிறது.
இதை முன்பே செய்திருக்க வேண்டும்..! ஈரானின் புதிய தலைமையினருடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த ட்ரம்ப்
வெளிநாட்டில் மூன்று நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam