டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவிய ஈரான்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) தேர்தல் பிரசாரம் ஊடுருவல் (ஹேக்) செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரானிய தரப்பினர் முக்கிய உள் ஆவணங்களைத் திருடி விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் ஈரானின் ஈடுபாட்டிற்கான குறிப்பிட்ட ஆதாரங்களை, ட்ரம்பின் பிரசார பிரிவு வழங்கவில்லை.
ஜனாதிபதி தேர்தல்
இருப்பினும் 2024 இல் அமெரிக்க பிரசாரத்தில் தலையிட வெளிநாட்டு முகவர்களின் முயற்சிகளை விபரிக்கும் அறிக்கையை மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஒரு நாளுக்குப் பின்னர் இந்த குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் முன்னாள் மூத்த ஆலோசகரின் மின்னஞ்சல் கணக்கிலிருந்து ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் உயர் அதிகாரிக்கு, கடந்த ஜூன் மாதம் ஈரானிய இராணுவ புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை ஒன்றை அனுப்பிய ஒரு உதாரணம், இந்த குற்றச்சாட்டுக்கு மேற்கோளிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் பிரதிநிதிகள் மறுத்துள்ளனர்.
இருப்பினும், ஈரான், மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள தனது எதிரிகளை குறிவைத்து ஊடுருவல் (ஹேக்கிங்)பிரசாரங்களை நடத்துவதாக நீண்ட காலமாக சந்தேகிக்கப்படுகிறது.
ஈரானுடன் உறவு
2020 ஆம் ஆண்டு ட்ரோன் தாக்குதலில் முக்கியப் புரட்சிக் காவலர் ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொன்ற ட்ரம்ப் மீது பதிலடி கொடுக்கவுள்ளதாக தெஹ்ரான் நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்க நீதித்துறை கடந்த வாரம் ஈரானுடன் உறவு கொண்ட ஒரு பாகிஸ்தானியர் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
அமெரிக்காவில் ட்ரம்ப் உட்பட அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக படுகொலை முயற்சிகளை சதி செய்ததாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
