ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது: அரசியல் பேராசிரியர் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடு, சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறுவதாக கத்தாரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அரசியல் இணைப் பேராசிரியர் பால் மஸ்கிரேவ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த விடயம் உலகளவில் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்"ஈரானின் இந்த நடவடிக்கை, 'கடல்சார் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையை மிகத் தெளிவாக மீறுகிறது.மேலும், இதன் பாதிப்புகள் இந்த நீரிணையோடு மட்டும் முடிந்து விடுவதில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல்
உலக நாடுகள் அனைத்திற்கும் ஹோர்முஸ் நீரிணையில் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள இது போன்ற அனைத்து முக்கிய கடல்சார் போக்குவரத்து நெரிசல் வழிகளிலும் பெரும் வணிக நலன்கள் உள்ளன.

உதாரணமாக, மத்திய தரைக்கடலுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல் போக்குவரத்து குறித்து இதேபோன்றதொரு கட்டுப்பாட்டு அறிவிப்பை ஸ்பெயின் நாடு வெளியிட்டால் எப்படி இருக்குமோ, அதே போன்றதொரு ஆபத்தான சூழலையே ஈரானின் தற்போதைய நடவடிக்கையும் ஏற்படுத்துகிறது என்று பால் மஸ்கிரேவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam