ஈரானின் மிகப் பலம் பொருந்திய தலைவர் படுகொலை.. மிக மோசமான பதிலடிக்கு தயாராகும் IRGC
புதிய இணைப்பு
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உயர் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு, தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய இராணுவத் தளபதி அமீர் ஹடாமி அச்சுறுத்தியுள்ளார்.
"சரியான நேரத்திலும் இடத்திலும், குற்றமிழைக்கும் அமெரிக்காவிற்கும் இரத்தவெறி கொண்ட சியோனிச ஆட்சிக்கும் தீர்க்கமான, வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்று ஹடாமி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
லாரிஜானி மற்றும் பிற 'தியாகிகளின்' மரணங்களுக்குப் பழிவாங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து தனித்து இயங்கும் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, லாரிஜானியின் மரணத்திற்கு 'பழிவாங்கும் விதமாக' மத்திய இஸ்ரேல் மீது ஏற்கனவே ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஈரானிய உயர் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் மரணத்தை ஈரான் அரச ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
அலி லாரிஜானியின் மரணம் ஈரான் தலைமைத்துவத்தின் மையத்தில் நெருக்கடியை ஆழப்படுத்துவதாக சர்வதேச தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
நெருக்கடியில் ஈரான்..
இஸ்ரேல், முன்னதாக வெளியிட்ட அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக, ஈரான் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் மரணத்தை தற்போது செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஈரானின் உயர் தேசியப் பாதுகாப்புக் குழுவின் தலைவரின் மறைவிடத்தை இரவு நேர வான்வழித் தாக்குதல் மூலம் தாக்கியதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
அதேநேரம், பசீஜ் போராளிக் குழுவின் தலைவர் குலாம்ரெசா சுலைமானி கொல்லப்பட்டதையும் ஈரான் முன்னதாக ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam