ஈரான் - பாகிஸ்தான் தூதரக உறவுகளை வலுப்படுத்த புதிய முயற்சி
ஈரானும், பாகிஸ்தானும் தங்கள் தூதரக உறவுகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் மீது, கடந்த 18ஆம் திகதி ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக பாகிஸ்தானும் தாக்கியதால், இருநாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகளில் சரிவு ஏற்பட்டது.
தூதரக உறவு
இந்த நிலையில், இருநாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல் நடத்திய பின்னர், தங்கள் தூதரக உறவுகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன.
மேலும், இருநாடுகளாலும் திரும்பபெறப்பட்ட தூதர்கள் மீண்டும் ஜனவரி 26ஆம் திகதி அந்தந்த நாட்டிற்கு திரும்புவார்கள் என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த அறிக்கையில், 'பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசு இடையே தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தூதர்களும் ஜனவரி 26, 2024க்குள் அந்தந்த பதவிகளுக்குத் திரும்பலாம் என்று பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இருநாடுகளும் பதற்றம்
இந்த அறிவிப்பானது, இரண்டு நாடுகளும் தங்கள் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சமிக்ஞையாக கருதப்படுகிறது.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இருநாடுகளும் பதற்றங்கள் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க, அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 14 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
