கொழும்பு வெள்ளத்தில் அநுரவுக்கு சாபம்! கோட்டபாயவின் விசுவாசியின் குமுறல்
கொழும்பில் நேற்று பெய்த அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வெள்ள நிலைமை தொடர்பில் பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கொழும்பின் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிய வேளையில், அரசாங்கத்திற்கு எதிராக இராஜ் வீரரத்ன பாடல் பாடியுள்ளார்.
வடிகான் முகாமைத்துவம்
கடந்த அரசாங்கத்தின் போது வெள்ள நீர் முகாமைத்துவம் சரியாக இருந்ததாகவும், சமகால அநுர அரசாங்கத்தில் சிறிய மழைக்கு கூட வெள்ள நிலைமை ஏற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறைந்தபட்சம் தலைநகரிலுள்ள கழிவுநீர் செல்வதற்கான வடிகான்கள் மற்றும் கால்வாய்களை சரிவர சுத்தப்படுத்த அதிகாரிகளால் முடிவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் கொழும்பில் இவ்வாறான ஒரு நிலை காணப்படவில்லை.
அரசாங்கத்தினால் சுத்தப்படுத்த முடியாததனை அந்த பகுதி இளைஞர் வெள்ளத்திற்கு மத்தியிலும் செய்து வருகின்றார்கள்.
இந்த அரசாங்கத்திற்கு சாபங்கள் வந்து சேர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள இத்தகைய சூழ்நிலையில், அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் தனது சமூக வலைத்தளங்கள் வாயிலாக நீண்ட காணொளிகளை பகிர்ந்துள்ளார்.