இராஜ், பாத்தியா -சந்துஷ் எங்களுடன் இணையுங்கள்:ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கலைஞர்கள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள கலைஞர்கள் பத்தரமுல்லை தியத்த பூங்கா அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் கலந்துக்கொண்ட பிரபல கலைஞரான பேஷல மனோஜ் பதாகை ஒன்றை ஏந்திவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர கடுமையான பிரசாரங்களை மேற்கொண்ட பாடகர்களான இராஜ் வீரரத்ன, பாத்தியா -சந்துஷ் ஆகியோர் வாருங்கள் எங்களுடன் இணையுங்கள் என பதாகையில் எழுதப்பட்டிருந்தது.
இராஜ் வீரரத்ன தீவிர ராஜபக்ச ஆதரவாளராக கடந்த காலத்தில் செயற்பட்டு வந்ததுடன் இனவாதத்தை தூண்டும் வகையிலான பல காணொளிகளை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளதாகவும் இரத்தினபுரி கூரகல, அம்பாறையில் முதுமஹா விகாரை போன்ற இடங்களுக்கு அந்த இடங்களை சிறுபான்மையினர் கைப்பற்றி வைத்துள்ளனர் என்ற வகையிலான பதிவுகளை செய்திருந்தாகவும் அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
எனினும் நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வரும் நேரத்தில் இராஜ் போன்றவர்கள் வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வருவதாக சிங்கள கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.



