ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்
2023 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நடவடிக்கை இன்று(23.12.2022) இடம்பெற்றது.
இன்றைய மினி ஏலத்திற்கமைய ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக சாம் கர்ரன் தெரிவாகியுள்ளார்.
இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது.இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டுள்ளன.
அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள்
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி சாம் கர்ரனை இந்திய பெறுமதியில் 18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி நிலவியதாகவும் இறுதியில் அவரை 17.50 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
