ஐ.பி.எல் 2025 ஆரம்பமாகும் திகதி: பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மும்பையில் இன்று(12) நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை அறிவித்துள்ளார்.
18ஆவது ஐபிஎல் தொடர்
2025 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் திகதி முதல் 18ஆவது ஐபிஎல் தொடர் ஆரம்பமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் இடம்பெறும் எனவும், 2025 ஐபிஎல் இறுதிப் போட்டி மே 25 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மாதங்கள் வரை ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.
10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த வருடம் நவம்பர் 24 & 25ஆம் திகதிகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |