முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த அழைப்பு!(Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் கார்த்திகை 27 சுடர் ஏற்றிவணக்கம் செலுத்த வருமாறு முள்ளிவாய்க்கால் பிரதேச மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் இன்று( 20.11.2022) முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு அழைப்பு

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நினைவிற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான தயார்படுத்தலில் பிரதேச மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் அனைவரும் வருகை தந்து சுடரேற்றி மாவீரரை நினைவில் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam