காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் யுத்த காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை நேற்று(20.05.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் முன்னெடுப்பு
இதன்போது, விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு, மற்றும் மண்முனைப் பற்று ஆகிய பிரதேசங்களிலிருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் 40 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, குழுத் தலைவர் விமலநாதன், பிராந்திய இணைப்பாளர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளர்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நேற்று(20) காலையிலிருந்து முன்னெடுத்துள்ள இந்த விசாரணைகள் மாலை 4 மணிவரை நடை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan