இலங்கை உறுதியான மீட்சி பாதையில் பயணிக்கின்றது.. குகதாசன் எம்பி நெகிழ்ச்சி!
2023 ஆம் ஆண்டில் -2.0 வீதம் ஆக இருந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் ஆனது ; 2024 ஆம் ஆண்டில் 5.0 வீதம் ஆக உயர்ந்து ; 2025 ஆம் ஆண்டிலும் அதே 5.0 வீதம் வளர்ச்சியைப் பேணி உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றி அவர், "2023 ஆம் ஆண்டில் 3,818 அமெரிக்க டொலர்களாக இருந்த ஆள் வீத வருமானம் ஆனது ; 2024 ஆம் ஆண்டில் 4,546 ஆக உயர்ந்து 2025 ஆம் ஆண்டில் முதன்முறையாக 5,000 அமெரிக்க டொலர்களைத் தாண்டி உள்ளது. இது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
நுகர்வோருக்கு நன்மை
2023 ஆம் ஆண்டில் 17.4 வீதம் ஆக இருந்த சராசரிப் பணவீக்கம் ஆனது ; 2024 ஆம் ஆண்டில் 1.2வீதம் ஆகக் குறைந்து ; 2025 ஆம் ஆண்டில் -0.5வீதம் என்ற பணவாட்ட நிலைக்கு (Deflation) மாறியது. இது நுகர்வோருக்கு நன்மை அளிப்பதாக அமைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 11.2 வீதம் ஆகக் காணப்பட்ட அரச வருமானம் ஆனது ; 2024 ஆம் ஆண்டில் 13.6வீதம் ஆக உயர்ந்து; 2025 ஆம் ஆண்டில் 16.7வீதம் ஆகப் பதிவாகியுள்ளது.
அதேவேளையில் 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 19.5 வீதம் ஆகக் காணப்பட்ட அரச செலவுகள்; 2024 ஆம் ஆண்டில் 20.4வீதம் ஆக உயர்ந்து ; 2025 ஆம் ஆண்டில் 19வீதம் ஆகக் குறைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி மறுசீரமைப்பின் விளைவாக 2023 ஆம் ஆண்டில் 0.6வீதம் ஆக இருந்த முதன்மை மிகையானது (Primary Surplus) ; 2024 ஆம் ஆண்டில் 2.2வீதம் ஆக உயர்ந்து, 2025 ஆம் ஆண்டில் 5.4வீதம் என்ற வரலாற்றுச் சாதனை அளவை எட்டியுள்ளது" என்றார்.