தென்னிலங்கையில் இளம் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்
களுத்துறையில் 28 வயது மனைவியை கொடூரமான முறையில் கொடுமைப்படுத்திய 44 வயது கணவனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி அவரது கணவர் மனைவியின் அந்தரங்க பகுதியில் சூடான கம்பியினால் சூடு நடத்திய போதிலும் அவருக்கு பயந்து அவர் அதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.
சில நாட்களில் இதனை அறிந்து கொண்ட கணவனின் தந்தை அவசர பொலிஸ் சேவையான 119 இற்கு தகவல் வழங்கியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
இதனையடுத்து சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் துணை பரிசோதகர் விஜயரத்ன விசாரணை மேற்கொண்டார்.
அதற்கமைய 1990 சுவசேரிய அம்பியுலன்ஸில் அந்தப் பெண்ணை களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சந்தேக நபரான கணவன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
