தண்டனைக்கு பயந்து குடும்ப உறுப்பினரையே காட்டிக்கொடுத்த மகிந்தவின் மகன்..! அம்பலமான கூட்டு சதி
தண்டனைக்கு பயந்து தனது குடும்ப உறுப்பினரையே மகிந்த ராஜபக்சவின் மகன் காட்டிக்கொடுத்ததாக வெளியாகியுள்ள தகவல் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, ஷிரந்தி ராஜபக்ச தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், 2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்பார் என்றும், அந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் மற்றும் அமைச்சரவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழலில், திலீபன் சிலை அகற்றப்பட்டமைக்கு பொறுப்பேற்காமல் மாநகர சபையும் பொலிஸாரும் ஒருவரை ஒருவர் கை காட்டிக்கொள்வது தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மக்களுக்காக உயிரைத் தியாகம் செய்த ஒருவரின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டமை அவமரியாதையான செயல் என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான பரபரப்பான அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை சுவாரஸ்யமான முறையில், உங்களுக்கே உரிய மொழிநடையில் தொகுத்து வழங்குகிறது “நாட்டு நடப்பு” நிகழ்ச்சி,