பெரும் சர்ச்சையாகியுள்ள 75 மில்லியன் ரூபா பண விவகாரம்! - பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
பணமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தனது வீட்டில் இருந்த 7.5 மில்லியன் ரூபா பணத்தை திருப்பிக் கொடுத்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் உட்பட தற்போது கடமையாற்றும் பல அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பல வெளிநாட்டவர்கள் உள்ளிட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஒருவரின் வீட்டில் இருந்து 7.5 மில்லியன் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு சம்பாதித்த பணம் என சந்தேகத்தின் பேரில் பேலியகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தப் பணத்தைக் கைப்பற்றியிருந்தனர்.
உண்டியல் முறையின் கீழ் அனுப்புவதற்காக பணம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டன.
மீட்கப்பட்ட பணம் சந்தேகநபரிடம் பணம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.