புதுக்குடியிருப்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தினம்
முல்லைத்தீவு மாவட்ட செயலகமும், இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களமும் இணைந்து நடத்தும் சர்வதேச யோகா தினமும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
ஜெயம் ஜெகன் (யோகா, சிலம்பம், கராத்தே, வர்மக்கலை, அடிமுறைக்கலை மாஸ்டர் இயக்குநர் இலங்கை யோகாப் பயிற்சி கல்லூரி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்தியத்துணைத் தூதுவர் சாய் முரளி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனும், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
இதன்போது சுமார் 1200இற்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.










ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri