யாழில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் பண்பாட்டு மாநாடு
உலகளாவிய ரீதியில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அனைத்துலக தமிழ் பண்பாட்டு மகாநாடு யாழில் நடைபெற்றுள்ளது.
இந்தநிகழ்வானது நேற்று(30) யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறையுடன் இணைந்து தஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு திருநெறி தமிழ் சைவ சமய பாதுகாப்புப்பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், இலண்டன் உலகச் செம்மொழித்தமிழ் சங்கம் பிரான்ஸ் இந்திய வம்சாவளி மக்களுக்கான அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
தமிழ் பண்பாட்டு மாநாடு
சுவிட்சர்லாந்து, கனடா, இங்கிலாந்து, நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ் மலேசியா சிங்கப்பூர், ரீயூனியன் தீவுகள், தென்ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி சி.சற்குணராசா கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக இந்திய தூதுவர் எஸ்.சிறி சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் தனுசா முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையை யாழ். பல்கலைக்கழக இந்துநாகரீக துறைத்தலைவர் பேராசிரியர் விக்னேஸ்வரி பவநேசன் நிகழ்த்தினார்.
வில்லிசை நிகழ்ச்சி
மாநாட்டின் நோக்கவுரையை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் க.பாஸ்கரன், வாழ்த்துரையை ஆறுதிருமுருகன் வழங்கினர்.
இம்மாநாட்டில் பேராசிரியர் சிவலிங்கராசா, பேராசிரியர் வேதநாதன், ஆறு திருமுருகன் அறிஞர்கள் கலைஞர்கள், துறைசார் வல்லுனர்கள் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள், உலக சாதனை செம்மல் விருது, இளம் கலைஞர்கள் எழுத்தாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.
சிறப்பு நிகழ்ச்சியாக கலைமாமணி சாம்பசிவசோமாஸ்கந்தசர்மா அவர்கள் வழங்கிய வள்ளிதிருமணம் வில்லிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
