வெளிவிவகார அமைச்சரின் செயலால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் ஏற்பட போகும் நிலைமை
கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மியன்மாரின் இராணுவ அரசாங்கத்தின் வெளி விவகார அமைச்சருக்கு, இலங்கை வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளமை காரணமாகச் சர்வதேச மட்டத்தில் இலங்கை மிகப் பெரிய அரசியல் அவமதிப்புக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இலங்கை வெளி விவகார அமைச்சர், மியன்மார் இராணுவ அரசாங்கத்தை உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கும் வகையில் செயற்பட்டுள்ளமையை கண்டித்து, புரோடெஸ்ட் ஸ்ரீலங்கா என்ற ஹேஷ்டேக், டுவிட்டர் மற்றும் முகநூல் ஆகிய சமூக வலைத்தளங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜெனிவா மனித உரிமை பேரவையின் மாநாடு நடந்து வரும் தருணத்தில் மியன்மார் இராணுவ அரசாங்கம், அந்நாட்டில் எதிர்ப்பில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களைக் கொலை செய்து வருகிறது.
இந்த நிலைமையால், முழு உலகமே மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் சந்தர்ப்பத்தில், இலங்கை வெளி விவகார அமைச்சர் செய்துள்ள செயல் காரணமாகச் சர்வதேச சட்டத்தில் இலங்கை தொடர்பில் அழிக்க முடியாது கரும்புள்ளி ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
By inivitating junta terrorist Wunna Maung Lwin to this ministerial meeting, Sri Lanka is implicitly legitimazing the 1st February coup and supporting a criminal organization. This can not happen. @GotabayaR @BimstecInDhaka@TostevinM #ShameOnYouSriLanka#ShameOnYouBIMSTEC pic.twitter.com/h4k2RD38S9
— Hsu Mon Phoo Phoo (@HsuMon95852920) March 10, 2021
பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை வெளி விவகார அமைச்சர், மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் வெளி விவகார அமைச்சருக்கு விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் மியன்மாரைச் சேர்ந்த பலர், தமது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.