சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு ரணில் கூறுவதன் நோக்கம் என்ன?
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரு பொறிமுறையாக சர்வதேச நாணய நிதியம் காணப்படுகிறதால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து நாணய நிதியத்தை நாடுமாறு வலியுறுத்துகிறார் என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
''கோவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். நெருக்கடியான நிலைமையைச் சீர்செய்ய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
மாற்று வழிமுறைமை ஊடாக தற்போதைய நிலைமையினை சமாளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் உத்தியோகப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளார்.
தற்காலிக பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணச் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரு பொறிமுறையாக சர்வதேச நாணய நிதியம் காணப்படுகிறதால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து நாணய நிதியத்தை நாடுமாறு வலியுறுத்துகிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அது அரச ஊழியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அரச செயலொழுங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பெரும்பாலான அமைச்சர்கள் அமைச்சரவையின் போது எடுத்துரைத்துள்ளார்கள்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri