வழிகாட்டி சரியாக இல்லையேல் நீதி கிடைக்காது! ஜனாதிபதியின் கருத்து

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Money
By Rakesh Dec 10, 2024 01:07 PM GMT
Report

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பில் விரைவில் வெளியாகவுள்ள அறிக்கை

சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பில் விரைவில் வெளியாகவுள்ள அறிக்கை

இலஞ்சம் மற்றும் ஊழல்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(09) நடைபெற்ற 2024 சர்வதேச ஊழல் எதிர்ப்புத் தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வழிகாட்டி சரியாக இல்லையேல் நீதி கிடைக்காது! ஜனாதிபதியின் கருத்து | International Anti Corruption Day Anura Speech

இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர்ப்புத் தினம் “தூய்மையான எதிர்காலத்திற்காக இளைஞர்களை ஒன்றிணைப்போம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது.

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு போதுமான சட்டங்களும் நிறுவனங்களும் இருந்த போதும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தமது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல் மற்றும் இலஞ்சம் என்பன சமூக அவலமாக மாறியுள்ளது. 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023ஆம் ஆண்டளவில் 115ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே, சர்வதேச ஊழல் எதிர்ப்புத் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிக விலைக்கு அரிசி விற்பனை: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அதிக விலைக்கு அரிசி விற்பனை: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி அநுர

வருடா வருடம் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், அடுத்த வருடம் அதனைக் குறைக்க முடியாவிட்டால் சர்வதேச தினக் கொண்டாட்டங்களை நடத்துவதில் எவ்வித பயனும் இல்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வழிகாட்டி சரியாக இல்லையேல் நீதி கிடைக்காது! ஜனாதிபதியின் கருத்து | International Anti Corruption Day Anura Speech

2021ஆம் ஆண்டில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு 69 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதுடன் 40 வழக்குகள் மீள பெறப்பட்டுள்ளன. 2022 இல் 89 வழக்குகளை தாக்கல் செய்த இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு 45 வழக்குகளை மீள பெற்றுள்ளது.

இந்த வழக்குகள் மீள பெறப்பட்டமைக்கான காரணத்தை ஆணைக்குழு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்தில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.

சிஐடியின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

சிஐடியின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

மக்களின் நம்பிக்கை

மேலும், அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வழிகாட்டி சரியாக இல்லையேல் நீதி கிடைக்காது! ஜனாதிபதியின் கருத்து | International Anti Corruption Day Anura Speech

எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யாமல் ஆரோக்கியமான நாடொன்றை உருவாக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலஞ்ச, ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும், இதன் மூலம் பிரஜைகளின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW      

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US