நட்டத்தில் இயங்கும் விமான சேவைகள்: நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்
தற்போது உலகின் பெரும்பாலான விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (08.05.2024) அமர்வில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதனகேவின் (Hesha Vithanage) கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் விமான சேவை நிறுவங்களான எயார் இந்திய (Air India) மற்றும் சுவிஸ் எயார்லைன்ஸ் (Swiss Airlines) போன்ற நிறுவனங்கள் கூட நஷ்டமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீட்டு தேவை
அதற்கமைய, இலங்கை போன்ற சிறிய நாடுகள் தங்களின் விமான சேவைகளை நடத்தி செல்வதில் கடினத்தன்மை இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் முதலீட்டு பற்றாக்குறை காணப்படுவதோடு விமானங்கள் குத்தகைக்கு எடுக்கப்படுகின்றன.
இதனால், விமான சேவைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள 6,000 பணியாளர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய இன்னொரு நிறுவனத்துடன் பங்காளராக இணைந்து பாரிய முதலீட்டை கொண்டு வர வேண்டியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை, கடந்த வருடம் 474 விமான சேவை ஊழியர்கள் பதவி விலகியுள்ளதாகவும் அதற்கமையவே 791 புதிய பணியாளர்கள் 2023ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞருக்கு நெருக்கடி கொடுத்தால் போராட்டம் வெடிக்கும்: ஜே.வி.பி. எச்சரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |